இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரில் பின்தங்கியுள்ளது. இந்தத் தொடரில் இதுவரை, இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது. இருவரின் ஃபார்ம் மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இருவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய பிறகு ரோஹித், கோலி இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இருவரைத் தவிர, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்தத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மூன்று வீரர்களும் பணிச்சுமையை சமாளிக்க தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுளளது. இதனால் சிட்னியில் ஜனவரி 3ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அடுத்த ஒரு மாதத்துக்கு இந்த மூன்று வீரர்களும் விடுமுறையில் இருப்பார்கள். பிப்ரவரி 19ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் 3 வீரர்களும் அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டி20போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
The post இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஒய்வு? appeared first on Dinakaran.