உக்ரைன் போருக்கு மத்தியில் புடினுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன கிம்: ராணுவத்தை வலுப்படுத்த அழைப்பு

சியோல்: ரஷ்ய அதிபர் புடினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வடகொரியா அதிபர், இரு நாட்டு ராணுவத்தை வலுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எழுதிய கடிதத்தில், ‘ரஷ்யாவுடனான கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் இரு நாட்டின் உறவுகள் மேலும் பலமடையும். ரஷ்ய ராணுவம் உட்பட அனைத்து ரஷ்யர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இருதரப்பு உறவுகளை மேலும் அதிகரிப்பது மட்டுமின்றி, புதிய திட்டங்களுடன் புதிய உயரத்தை அடைய வேண்டும். ரஷ்ய ராணுவமும், ரஷ்ய மக்களும் நீவ்-நாஜிசத்தை தோற்கடிக்க வேண்டும்.

அதற்கான வெற்றியை 21ம் நூற்றாண்டின் இந்த புத்தாண்டு அமைய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடந்த உச்சிமாநாட்டில் கிம் – புடின் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஏதேனும் இரு நாடுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மூன்றாம் தரப்பினர் ஆயுதத் தாக்குதல் நடத்தினால் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு ஆதரவளிக்க வட கொரியா பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

The post உக்ரைன் போருக்கு மத்தியில் புடினுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன கிம்: ராணுவத்தை வலுப்படுத்த அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: