- தர்மபுரி கலெக்டர் அலுவலக உணர்வு
- தர்மபுரி
- மாதயன்
- தர்மபுரி மாவட்டம்,
- பாப்ரெட்டிபட்டி தாலுகா, நாதமேடு கிராமம்
- தரங்கமணி
*தர்மபுரி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகள் அஞ்சலி(24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(25) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தங்கமணி ரயில்வேயில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.
நேற்று அஞ்சலி தனது தந்தை மாதேசுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து, இருவரும் தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அஞ்சலி கூறுகையில், ‘நானும், தங்கமணியும் பெற்றோரை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்களது திருமணத்திற்கு, எந்த சீர்வரிசையும் எனது பெற்றோர் செய்யவில்லை. இந்நிலையில், எனது கணவர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், வரதட்சணை கேட்டு என்னையும், எனது குழந்தைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பொம்மிடி போலீசிலும், தர்மபுரி எஸ்பி அலுவலகத்திலும் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post கணவன் வரதட்சணை கொடுமை செய்வதாக புகார் தந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் appeared first on Dinakaran.