- வில்லுபுரம் கலெக்டரேட்
- தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
- விழுப்புரம்
- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சங்கம்
- தின மலர்
*டிஆர்ஓ பேச்சுவார்த்தை
விழுப்புரம் : இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படாமல் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சங்கத்தினர் குடியேறும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.
குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுவதாகவும், தங்கள் சங்கத்தின் சார்பில் விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து தாங்கள் மனு அளித்தும், பலமுறை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை என கூறி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் மகாலட்சுமி, பாலகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சந்தராசு, விழுப்புரம் மாவட்ட தேன்கூடு மாற்றுத்திறனாளிகள் உரிமை நலச்சங்கத்தின் பூபாலன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சங்கத்தினர் அளித்த தகுதியான மாற்றுத்திறனாளிகளின் பட்டியலின்படி, முதல்வர் விழுப்புரம் வருகையின்போது வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.
The post இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் appeared first on Dinakaran.