- காரனூர் சாலை
- கள்ளக்குறிச்சி
- சின்னா சேலம்
- காரனூர்
- கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சாதியம்பட்டு…
- காரனூர் சாலை சந்திப்பு
- தின மலர்
சின்னசேலம் : கள்ளக்குறிச்சி அருகே காரனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்டர் மீடியன் அமைத்து, சாலை சந்திப்பை அகலப்படுத்தும் வகையில் ரூ.1.20 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி, சடையம்பட்டு கிராம எல்லையில் இயங்கி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து காரனூர் பஸ்நிறுத்தம் வந்து பின் கல்லூரிக்கு செல்கின்றனர்.
அதைப்போல மாலை நேரத்தில் அப்பகுதியில் அதிகளவில் மாணவ, மாணவிகள் கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் செல்லும் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இந்த பேருந்து நிறுத்தம் பகுதி மிகவும் குறுகலாக இருவழிப்பாதையாக மட்டுமே உள்ளது.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த சந்திப்பு பகுதியில் மட்டும் சென்டர் மீடியன் அமைத்து கள்ளக்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜன், உதவி பொறியாளர் மணிமொழி ஆகியோர் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி சாலை சந்திப்பை அகலப்படுத்திட ரூ.1.20 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கி சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த இடத்தில் சென்டர் மீடியன் அமைப்பதுடன், அந்த பகுதியில் உள்ள சிறுபாலத்தை அகலப்படுத்திடவும் பணி நடைபெற உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தி, சென்டர் மீடியன் அமைத்தால் மாணவர்கள் பாதுகாப்பாக நின்று செல்லலாம் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post கள்ளக்குறிச்சி அருகே காரனூர் சாலை சந்திப்பை அகலப்படுத்த ₹1.20 கோடியில் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.