- அமைச்சர்
- ரகுபதி
- புதுக்கோட்டை
- சட்ட அமைச்சர்
- கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி
- புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்
- ஏலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக போராட்டம் என்பது எள்ளி நகைக்க கூடிய ஒன்று. அதிமுக ஆட்சி காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. அப்போது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று அடங்காப்பிடாரித்தனமாக மறுத்தவர்கள் அவர்கள். கடைசியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி நாங்கள் அன்று நடவடிக்கை எடுக்க வைத்தோம்.
இன்று நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இப்பொழுது அதிமுக போராட்டம் என்பதெல்லாம் வீண் வேஷம். இருக்கிறோம் என்று காண்பித்து கொள்வதற்காக அதிமுகவினர் இப்படி கபட நாடகத்தை நாடுகிறார்கள். இவ்வாறு கூறினார்.
பக்கத்து மாநிலங்களின் நிலையை விஜய் பார்க்கட்டும்
அமைச்சர் ரகுபதி கூறுகையில், நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய், பீகாரில், ஒடிசாவில் பாருங்கள், வேறு மாநிலத்திற்கு சென்று பாருங்கள், அங்கு பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் நடமாட முடிகிறதா என்று. அங்கே எல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள். இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று நிரூபிக்கின்றோம் என்றார்.
The post இருக்கிறோம் என்று காண்பித்து கொள்கிறார்கள்; அதிமுக போராட்டம் வேஷம்: அமைச்சர் ரகுபதி தாக்கு appeared first on Dinakaran.