×

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஓய்வூதியர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் இப்போது வழங்கப்படும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும் போது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கக் கூடாது. அவர்களுக்கும் உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்குவதுடன், பணி ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்த அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : ANBUMANI ,Chennai ,Pamaka ,President ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர்...