×

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்காவின் 39வது அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். கடந்த 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை இவர் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்தார். ஜிம்மி கார்ட்டர் இந்தியாவின் நண்பராக கருதப்பட்டார். 1977ம் ஆண்டு எமர்ஜென்சி வாபஸ் பெறப்பட்டு ஜனதா கட்சியின் வெற்றிக்கு பின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்கா அதிபர் ஜிம்மி கார்ட்டர். இந்திய நாடாளுமன்றத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக இவர் உரையாற்றினார். ஜார்ஜியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த முன்னாள் அதிபர் ஞாயிறன்று தனது 100வது வயதில் காலமானார். இவர் அமெரிக்க வரலாற்றில் அதிககாலம் வாழ்ந்த அதிபராவார். ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு அதிபர் ஜோபைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : US ,President ,Jimmy Carter ,Washington ,President of the United States ,India ,Janata… ,Former ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்