சியோல்: தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் கடந்த 3ம் தேதி திடீரென நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளால் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதாக அவர் கூறிய நிலையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராணுவ சட்டத்தை சிறிது நேரத்தில் வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து, பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவருக்கு எதிராக ராணுவம், காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்த ஊழல் தடுப்பு குழு கூட்டு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 முறை அழைப்பு விடுத்தும் யூன் ஆஜராகவில்லை. இதனால், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கக் கோரி விசாரணை அதிகாரிகள் சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
The post பதவிநீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபரை கைது செய்ய நடவடிக்கை: நீதிமன்றத்தில் மனுதாக்கல் appeared first on Dinakaran.