×

ஆப்கானிஸ்தானில் பெண்களை பணியமர்த்தும் தொண்டு நிறுவனங்கள் மூடப்படும்: தலிபான்கள் உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தலிபான்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஏனென்றால் பெண்கள் தலையில் சரியான முறையில் ஹிஜாப் அணிவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில் தலிபான்கள் அரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘‘தலிபான்களால் கட்டுப்படுத்தப்படாத நிறுவனங்களில் அனைத்து பெண் பணியாளர்களையும் நிறுத்த வேண்டும். அரசின் உத்தரவுக்கு ஒத்துழைப்பு தராதபட்சத்தில் அந்த நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் பெண்களை பணியமர்த்தும் தொண்டு நிறுவனங்கள் மூடப்படும்: தலிபான்கள் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Taliban ,Kabul ,Taliban… ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் புதிதாக கட்டப்படும்...