×

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற நியூசி

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்தில் நியூசி வென்றது. இந்நிலையில் நேற்று 2வது டி20 நடந்தது.
முதலில் களம் கண்ட நியூசி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் விளாசியது. பின்னர் ஆடிய இலங்கை, 19.1ஓவரில் 141 ரன்னுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. கடைசி 15 ரன் எடுப்பதற்குள் இலங்கையின் 7 வீரர்கள் அவுட்டாகினர். 2வது வெற்றியை பெற்றுள்ள நியுசி. 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

The post இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற நியூசி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,T20 ,Sri Lanka ,Mount ,Maunganui ,Dinakaran ,
× RELATED இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20...