- சென்னை மாவட்டம்
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- பி.கே.சேகர்பாபு
- காமராஜ் கல்லூரி
- தூத்துக்குடி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைகள் துறை இயக்குநர் மூவலூர்...
சென்னை: சென்னை மாவட்டத்தில் மாணவியருக்கான புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரியில் நேற்று நடந்த அரசு விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை, பற்று அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேலு நாச்சியார் அரங்கத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை மாணவிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
சென்னை மாவட்டத்தில் 131 கல்லூரிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 வகுப்புவரை பயின்ற 2025 உயர் கல்வி பயிலும் மாணவியர் இத்திட்டத்தின் கீழ்பயன் பெறுவார்கள். ஏற்கனவே, 2023-24ம் கல்வி ஆண்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 5097 மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். இந்நிகழ்வின் போது, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மாமன்ற உறுப்பினர் ரேவதி, தென் சென்னை சமூக நல அலுவலர் வி.முத்துச்செல்வி, வடசென்னை சமூக நல அலுவலர் ஹரிதா, முன்னோடி வங்கி மேலாளர் சோமேஷ் சரவணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.