மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி 2 பழங்குடியின பெண்களை கட்டிப் போட்டு தாக்கிய 15 பேர் மீது வழக்கு: ஒடிசாவில் பதற்றம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி பழங்குடியினப் பெண்கள் இருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் காரிமுக்ரா கிராமத்தில் இரு பழங்குடியினப் பெண்கள் மதப் பிரசாரம் செய்ய வந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட குழுவினர், சம்பவ இடத்திற்கு வந்து அந்தப் பெண்களை மரத்தில் கட்டி வைத்தனர். மேலும் அந்தப் பெண்களின் முகத்தில் கொடூரமாகத் தாக்கினர். அவர்களை ‘ஜெய்  ராம்’ கோஷம் எழுப்புமாறு கூறினர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கட்டிப் போட்டிருந்த இரு பெண்களையும் மீட்டனர். பின்னர் அந்தப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 15 பேர் மீது எஸ்சி/எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்தக் கும்பல் இரு பெண்களைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவ்விவகாரத்தால் காரிமுக்ரா கிராமத்தில் பதற்றம் நிலவி வருவதால் காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

The post மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி 2 பழங்குடியின பெண்களை கட்டிப் போட்டு தாக்கிய 15 பேர் மீது வழக்கு: ஒடிசாவில் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: