புதுடெல்லி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜி நேற்று பேட்டியளிக்கையில்,‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இடையே சித்தாந்தம் இல்லாததால் கட்சியின் பழைய தொண்டர்கள் அந்நியப்பட்டு விட்டதாக உணர்கின்றனர்.
இந்த நிலை குறித்து கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.பிரணாப் முகர்ஜி இறந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்சியின் செயற்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றவில்லை ஏன் என்பதற்கு காங்கிரஸ் பதில் சொல்லியே ஆக வேண்டும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது அலட்சியப்படுத்தப்பட்டதா என தெரியவில்லை.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு என்ன நடந்தது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைத்து அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’’ என்றார்.
The post என் தந்தை இறந்தபோது கட்சியின் செயற்குழுவை கூட்டாதது ஏன்..? காங்கிரசுக்கு பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி appeared first on Dinakaran.