- ஆந்திர துணை முதல்வர்
- திருமலா
- ஆந்திர துணை முதல்வர்
- பவன் கல்யாண்
- பார்வதிபுரம் மன்யம் மாவட்டம்
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
திருமலை: ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் கடந்த 2 நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது துணை முதல்வரின் நிகழ்ச்சியில், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி சீருடை அணிந்த ஒருவர் சந்தேகப்படும் நிலையில் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார். குறிப்பாக துணை முதல்வர் வாகனம் நிறுத்துமிடத்தில் நின்றபடியும், சிறிது தூரம் நடந்தபடியும், பவன்கல்யாண் பின்னால் சுற்றியபடியும், அவர் அடிக்கல் நாட்டிய இடங்களிலும் நின்று போட்டோ எடுத்து ‘வாட்ஸ்அப்’ ஸ்டேட்டஸில் வைத்தபடி இருந்துள்ளார்.
இதனை கவனித்த உயரதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், விஜயநகரத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ்(41) என்பதும், அரசுத்துறையில் எடையாளர் மற்றும் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இந்நிலையில் சூர்யபிரகாஷின் தந்தை, தட்டிராஜேரு பகுதியில் 9 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், ஆனால் அது நீண்ட நாட்களாக பத்திரப்பதிவு செய்யாததால் அந்த நிலத்தை உடனடியாக பத்திரப்பதிவு மேற்கொள்வதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகளிடம் ஐபிஎஸ் அதிகாரி வேடமணிந்து பேசிவந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இப்பகுதியில் துணை முதல்வர் வந்துள்ளதால் அவருடன் இருப்பதுபோல் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயன்றதும் தெரியவந்தது.இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து சூர்யபிரகாஷை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
The post ஆந்திர துணை முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி கைது appeared first on Dinakaran.