×

டெல்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்

புதுடெல்லி: சட்டவிரோதமாக டெல்லியில் குடியேறிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 வங்கதேசத்தவர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர். டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவின்படி டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள டெல்லி காவல்துறையினர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி வசந்த் குஞ்ச் தெற்கு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ரங்புரியில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “வங்கதேசத்தின் மதரிபூர் மாவட்டம் கேகர்ஹாட் கிராமத்தை சேர்ந்த ஜஹாங்கீர் தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக ரங்புரி பகுதியில் தங்கியிருந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆறு பேரும் நாடு கடத்தப்பட்டனர்” என்றனர்.

The post டெல்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் நாடு கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Governor ,V.K. Saxena ,Delhi Police ,Bangladeshis ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...