இந்த விபத்திற்கு விமானம் மீது பறவை மோதியது காரணமாக இருக்கலாம் என ரஷ்யா முதலில் கூறியிருந்தது.
ஆனால் விமானத்தின் முன் பகுதியில் பெரிய ஓட்டை இருந்ததாகவும், அதன் வால் பகுதியில் குண்டுகளால் ஏற்படும் சேதம் இருப்பதாகவும் நிபுணர்கள் தகவல் வெளியிட்டனர். எனவே, ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். ரஷ்ய வான்வெளியில் நடந்தது சோகமான சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் விடுத்த அறிக்கையில், ‘உக்ரைன் டிரோன்கள் குரோஸ்னி அருகே நடத்திய தாக்குதல் காரணமாக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருந்தன. அந்த சமயத்தில் அஜர்பைஜான் பயணிகள் விமானம் வந்ததால் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தவறுதலாக அந்த விமானத்தை தாக்கி உள்ளன’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் போரால் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் கைது வாரண்ட் பிறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் ரஷ்ய அதிபர் புடினுக்கு சர்வதேச அளவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
The post விபத்தில் 38 பயணிகள் பலியான அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டது உறுதியானது: மன்னிப்பு கேட்டார் அதிபர் புடின் appeared first on Dinakaran.