இந்நிலையில், தென் கொரிய நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்ததில் 28 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தென்மேற்கு கடற்கரை விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் இருந்து விலகி வேலியில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்து பயணிகளை அகற்ற மீட்பு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
யோன்ஹாப் செய்தி நிறுவனம் 28 உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளது. ஆனால், அவசர அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. மற்ற தென் கொரிய ஊடகங்களும் இதேபோன்ற உயிரிழப்புகளை தெரிவித்துள்ளன. உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் விமானத்தில் இருந்து அடர்த்தியான கறுப்பு புகையின் வெளியாவதையும், விமானம் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பின.
The post தென் கொரியாவில் 175 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து; 28 பேர் உயிரிழப்பு என தகவல்! appeared first on Dinakaran.