×

வங்கதேசத்தில் வாக்காளர் வயது 17 ஆக குறைகிறது

டாக்கா: வங்கதேசத்தில் வாக்களிக்கும் வயதை 18 வயதில் இருந்து 17 ஆக குறைப்பதற்கு இடைக்கால அரசின் தலைவர் பரிந்துரை செய்துள்ளார். வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஹேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு முகமது யூனுஸ்(84) தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில்,வங்கதேசத்தின் விடுதலை போரின் வெற்றி நாள் கொண்டாட்ட விழாவில் பேசிய முகமது யூனுஸ்,‘‘நாட்டில் அடுத்தாண்டு இறுதியிலோ அல்லது 2026 ஜனவரி மாதத்திலோ தேர்தல் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடக்கும்.இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை முடிவு செய்வதற்கு வாக்களிக்கும் உரிமையை 18 வயதில் இருந்து 17 வயது ஆக குறைக்க வேண்டும். மேலும் வேட்பாளர்கள் வயதை 21ஆக குறைக்க வேண்டும் என்பது எனது கருத்து’’ என்றார். முகமது யூனுஸின் இந்த பரிந்துரைக்கு முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

The post வங்கதேசத்தில் வாக்காளர் வயது 17 ஆக குறைகிறது appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Sheikh Hasina ,Mohammad Yunus ,Bangladesh's… ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவை...