டாக்கா: வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. ஷேக் ஹசீனாவை இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. மாணவர் போராட்டத்தி ல் பல உயிர்கள் பறிபோனதற்கு காரணமாக இருந்ததாக ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளன.
இந்த வழக்குகளில் ஷேக் ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டியிருப்பதால், அவரை உடனடியாக நாடு கடத்த வேண்டுமென வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவுக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த தகவலை வங்கதேச வெளியுறவு விவகார ஆலோசகர் தவுகித் ஹூசேன் நேற்று தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்: வங்கதேசம் கடிதம் appeared first on Dinakaran.