×

காலநிலை மாற்றத்தால் 2024ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது: ஐரோப்பாவின் நிறுவனம் ஆய்வறிக்கை

டெல்லி: காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஐரோப்பாவின் காலநிலை கணிப்பு அமைப்பான கோப்பர்னிகஸ், 2024 ஆன் ஆண்டு தான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு. மேலும், இந்த ஆண்டு தான் முதன்முறையாக தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப நிலையைக் பதிவாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு உலகளவில் 41 நாட்கள் அதிக வெப்பமான நாளாக அமைந்தன. இதுவே கடந்த ஆண்டு 26 நாட்களாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.

வேர்ல்டு வெதர் ஆட்ரிப்யூஷன் (World Weather Attribution (WWA) மற்றும் க்ளைமேட் சென்ட்ரல் ( Climate Central ) மேற்கொண்ட ஆய்வில், காலநிலை மாற்றத்தால் உலகளவில் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. சிறு தீவுகள், வளரும் நாடுகள் இந்த கூடுதல் வெப்ப நாட்களால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், அப்பகுதிகளில் கூடுதலாக 130 வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டு 219 தீவிர காலநிலை நிகழ்வுகள் நடந்துள்ளன. தீவிர காலநிலை நிகழ்வுகளால் உலகம் முழுவதும் 3700 பேர் உயிரிழந்துள்ளனர். 26 மோசமான நிகழ்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக சூடான், நைஜீரியா, நைஜர், கேமரூன், சாட் போன்ற நாடுகளில் வெள்ளத்தால் உயிரிழப்புகள் அதிகமாக பதிவாகிள்ளது. தீவிர காலநிலை தாக்கம் தொடர்ந்தால் இந்தப் பகுதிகள் மேலும் இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களை சந்திக்கக் கூடும். 2040-ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை கடக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காலநிலை மாற்றத்தால் 2024ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது: ஐரோப்பாவின் நிறுவனம் ஆய்வறிக்கை appeared first on Dinakaran.

Tags : Europe's Institute ,Delhi ,Copernicus ,Europe ,Europe's Institute Thesis ,Dinakaran ,
× RELATED மகள் இருக்கும் இடம் தெரிந்தும்...