சென்னை: சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: அம்பேத்கரை அவமானப்படுத்திய விசயத்தில், அமித்ஷா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், காவல்துறை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, ஜாமீனில் வெளியே விடாமல், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும். அண்ணாமலை கவன ஈர்ப்புக்காக, ஏதேதோ செய்கிறார். தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொள்வது, செருப்பு அணிய மாட்டேன் எனக் கூறுவது உள்ளிட்ட அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் நகைப்புக்குரியதாக இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
The post திருமாவளவன் பேட்டி அண்ணாமலை நடவடிக்கை நகைப்புக்குரியது appeared first on Dinakaran.