×

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள் இடிப்பு


பெரம்பூர்: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைகள் இடிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 29க்கு உட்பட்ட திருவிக. நகர், வெற்றி நகர், கார்த்திக் தெரு பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 400 சதுர அடி இடத்தை சுந்தர்ராஜ் என்பவர் ஆக்கிரமித்த அந்த இடத்தில் 3 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கிய பிறகு அந்த கட்டிடத்தில் செயல்பட்டுவந்த ஏடிஎம் மையம் மற்றும் கடைகளை சம்பந்தப்பட்டவர்கள் காலி செய்துவிட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை உதவி பொறியாளர் தினேஷ் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட 400 சதுர அடி இடம் உள்ள 3 கடைகளையும் பொக்லைன் இயந்திரம் வைத்து இடித்து அகற்றி இடத்தை மீட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பியம் உதவி கமிஷனர் முகேஷ் ஜெயக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கிருபாநிதி, சிரஞ்சீவி, பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

The post மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Chennai Municipal Zone ,Ward 29 ,SUNDERRAJ ,CHENNAI ,NAGAR, VANITY NAGAR, KARTHIK STREET AREA ,Dinakaran ,
× RELATED 6 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது