ஊட்டி ரோஜா பூங்காவில் உதிர்ந்த ரோஜா இதழ்கள்

*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி : ஊட்டியில் ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் உதிர்ந்து, காய்ந்தும் காணப்படுகின்றன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிைடையே ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் 1500 ரகத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது.

பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியம்மிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில் இருந்து பெய்த மழை காரணமாகவும், அவ்வப்போது பனிப்பொழிவு நிலவி வருவதாலும் பூங்காவில் உள்ள பெரும்பாலான ரோஜா செடிகள் மலா் இதழ்கள் உதிர்ந்து காணப்படுகின்றன.

பெரும்பாலான செடிகளில் மலர்கள் இல்லாத நிலையில் குறைந்த அளவிலான செடிகளில் மட்டுமே மலர்கள் உள்ளன. இதனால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘ஊட்டி ரோஜா பூங்காவை பார்வையிட வந்தோம். ஆனால் இங்குள்ள பனிப்பொழிவு காரணமாக மலா்கள் உதிர்ந்தும், காய்ந்தும் காணப்படுகிறது. இதனால் மலர்களை காண முடியாமல் ஏமாற்றமடைந்தோம்’’ என்றனர்.

The post ஊட்டி ரோஜா பூங்காவில் உதிர்ந்த ரோஜா இதழ்கள் appeared first on Dinakaran.

Related Stories: