வி.கே.புரம்: பாபநாசம் அகஸ்தியர் அருவியில் இறந்த குட்டியை மடியில் வைத்து கொண்டு மனிதனைப் போல் தலையில் அடித்துக்கொண்டு தனது சோகத்தை வெளிப்படுத்திய குரங்கின் செயல்பாடு சுற்றுலாப் பயணிகள மனதை நெருட வைத்தது. நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது . இங்கு ஆண்டுதோறும் இந்த அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். இதனால் உள்ளூர் மட்டும் இன்றி வெளிமாவட்டம், வெளி மாநிலத்திலிருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் அருவியில் குளித்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. சுற்றுலா வரும் பயணிகள் இந்த குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை சுற்றித்திரிந்த குரங்கின் குட்டி ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது. இதனை அறிந்த தாய் குரங்கு, அதனை தூக்கி தனது மடியில் வைத்து அங்குமிங்கும் சுற்றி திரிந்தபடி அழுதுகொண்டே மனிதனைப் போல் தலையில் அடித்துக்கொண்டு தனது சோகத்தை வெளிப்படுத்தியது. இச்சம்பவத்தை கண்ட சுற்றுலா பயணிகள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.
The post பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் சோகம்; இறந்த குட்டியை மடியில் வைத்து அழுது தவித்த தாய் குரங்கு: சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.