×

துறையூர்- முசிறி செல்லும் தார்சாலையை சீரமைக்க கோரிக்கை

துறையூர், டிச.28: துறையூரிலிருந்து முசிறி செல்லும் நெடுஞ்சாலை பல்லாங்குழி போல் இருப்பதால் வாகனங்கள் மிதந்து செல்கின்றன. துறையூரில் இருந்து முசிறி செல்லும் நெடுஞ்சாலை கடந்த சில தினங்களாக பெய்த கனமழைக்கு தற்பொழுது பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக துறையூர் முசிறி ரவுண்டானாவில் இருந்து கண்ணனூர் பாளையம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கனரக வாகனம், இருசக்கர வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. சாலையில் உள்ள பள்ளங்களில் செல்லும்போது அதிர்வு காரணமாக உதிரிபாகங்கள் சேதமடைவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.இதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனம் பழுதடைவதாகவும், சாலைகளில் ஏற்பட்டுள்ள மேடு பள்ளங்களால் செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post துறையூர்- முசிறி செல்லும் தார்சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thuraiyur ,Musiri ,Thuraiyur Musiri ,Dinakaran ,
× RELATED துறையூரில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய...