- நாசியக்கொடி வீரமலை முகாம்
- திருச்சி
- வீரமலபாளையம்
- Manapara
- மாவட்ட கலெக்டர்
- பிரதீப் குமார்
- நாசியக்கொடி வீரமலை
திருச்சி, டிச.28: மணப்பாறை அருகே வீரமலைப்பாளையத்தில் வருகிற 29ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதிவரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கிசுடும் இடத்தில் நாளை (29-12-2024) முதல் வருகிற 7-1-2025ம் தேதி வரை காலை 7.30 மணிமுதல் மாலை 5.30மணிவரையும், மாலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரையும் 27th BN, ITBP, Nooranad Sanatorium, Alappuzha, Kerala Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது எனவும், மேலோ குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பிரதீப்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
The post அரை கம்பத்தில் பறந்த தேசியக்கொடி வீரமலைபாளையத்தில் நாளைமுதல் துப்பாக்கி சுடும் பயிற்சி பொதுமக்களுக்கு தடை appeared first on Dinakaran.