×

கை நழுவும் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் வேட்டை இந்தியா விட்டது கோட்டை; 310 ரன் பின்னடைவு

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 474 ரன் குவித்துள்ளது. இந்தியா முதல் இன்னிங்சில் 164 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து மோசமான தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன் எடுத்தது. 2வது நாளான நேற்று ஆஸி வீரர்கள் ஸ்மித் 68, கம்மின்ஸ் 8 ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். பொறுப்புடன் விளையாடிய இருவரையும் பிரிக்க இந்தியா போட்ட திட்டங்கள் பலன் தரவில்லை. ஸ்மித் சதம் விளாசினார்.

அரை சதத்தை நெருங்கிய கேப்டன் கம்மின்ஸ் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 112 ரன் விளாசினர். அதனையடுத்து வந்த ஸ்டார்க் 15 ரன்னில் வெளியேறினார். அடுத்த ஓவரில் ஸ்மித் 140 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த லயன் தன் பங்குக்கு 13 ரன் எடுத்து வெளியேற ஆஸியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்து. அந்த அணி 122.4 ஓவரில் 474 ரன் எடுத்தது. இந்திய வீரர்கள் பும்ரா 4, ஜடேஜா 3, ஆகாஷ் 2, வாஷிங்டன் ஒரு விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் மீண்டும், ஜெய்ஸ்வாலுடன் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கினார்.

அந்த மாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. ரோகித்தை 3 ரன்னில் கம்மின்ஸ் வெளியேற்றினார். அடுத்து வந்த ராகுல் 24 ரன் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இடையில் ஜெய்ஸ்வால் அரை சதத்தை கடந்தார். தொடர்ந்து இணை சேர்ந்த ஜெய்ஸ்வால், கோஹ்லி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி 3வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்தனர். சதத்தை நெருங்கிய ஜெய்ஸ்வால் 82ல் ரன் அவுட்டானார். தொடர்ந்து கோஹ்லி 36, ஆகாஷ் 0 என அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 152 என்றிருந்த இந்தியா 7 ரன் சேர்ப்பதற்குள் 3விக்கெட்களை பறி கொடுத்தது. தொடர்ந்து இணை சேர்ந்த ரிஷப் 6, ஜடேஜா 4 ரன் எடுத்திருந்தபோது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியா 46 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்திருந்தது. கம்மின்ஸ், ஸ்காட் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்தியா 310ரன் பின்தங்கிய நிலையில் 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர இருக்கிறது.

அற்புத வீரர் ஸ்மித்
* பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித்தின் முதல் நாள் சராசரி 115.33 ஆக உள்ளது. அவர் 8 இன்னிங்சில் 346 ரன் எடுத்துள்ளார்.
* சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான சிவப்பு பந்து டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் ஸ்மித் 162*, 133, 192, 117, 0, 131, 36, 0, 101, 140ரன் எடுத்துள்ளார் .
* இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய வெளிநாட்டினர் பட்டியலில் ஸ்மித் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 43 இன்னிங்சில் நேற்றுடன் 11சதங்கள் விளாசியுள்ளார்.
* இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (55இன்னிங்ஸ், 10 சதம்), வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கேரி சோபர்ஸ் (30இன்னிங்ஸ் 8சதம்), விவியன் ரிச்சர்ட்ஸ் (41இன்னிங்ஸ், 8சதம்), ஆஸி வீர் ரிக்கி பான்டிங்(51இன்னிங்ஸ், 8 சதம்) ஆகியோர் உள்ளனர்.

ஓட்டங்கள் விவரம்
ஆஸி முதல் இன்னிங்ஸ்
சாம் கான்ஸ்டஸ் (எல்பிடபிள்யூ)ஜடேஜா 60
உஸ்மான் கவாஜா (சி) ராகுல் (பி) பும்ரா 57
மார்னஸ் லபுஷேன் (சி) கோஹ்லி (பி) வாஷிங்டன் சுந்தர் 72
ஸ்டீவன் ஸ்மித் (பி) ஆகாஷ் தீப் 140
டிராவிஸ் ஹெட் (பி)பும்ரா 0
மிட்செல் மார்ஷ் (சி)ரிஷப் (பி) பும்ரா 4
அலெக்ஸ் கேரி (சி)ரிஷப் (பி)பும்ரா 31
பேட் கம்மின்ஸ் (சி)நிதிஷ் (பி)ஜடேஜா 49
மிட்செல் ஸ்டார்க் (பி)ஜடேஜா 15
நாதன் லயன் (எல்பிடபிள்யூ)பும்ரா 13
ஸ்காட் பொலண்ட் ஆட்டமிழக்கவில்லை 6
உதிரிகள் 27
மொத்தம் (122.4ஓவர், ஆல்அவுட்) 474
விக்கெட் வீழ்ச்சி: 1-89, 2-154, 3-237, 4-240, 5-246, 6-299, 7-411, 8-455, 9-455, 10-474
பந்து வீச்சு: ஜஸ்பிரித் பும்ரா 28.4-9-99-4, முகமது சிராஜ் 23-3-122-0, ஆகாஷ் தீப் 26-8-94-1, ரவீந்திர ஜடேஜா 23-4-78-3, நிதீஷ்குமார் 7-0-21-0, வாஷிங்டன் சுந்தர் 15-2-49-1

இந்தியா முதல் இன்னிங்ஸ்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் (கம்மின்ஸ்) 82
ரோகித் சர்மா (சி)ஸ்காட் (பி)கம்மின்ஸ் 3
கே.எல்.ராகுல் (பி) கம்மின்ஸ் 24
விராத் கோஹ்லி (சி) கேரி (பி) பொலண்ட் 36
ஆகாஷ் தீப் சி) லயன் (பி) பொலண்ட் 0
ரிஷப் பண்ட் ஆட்டமிழக்கவில்லை 6
ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்கவில்லை 4
உதிரிகள் 9
மொத்தம் (46 ஓவர், 5 விக்கெட்) 164
விக்கெட் வீழ்ச்சி: 1-8, 2-51, 3-153, 4-154, 5-159
பந்து வீச்சு: மிட்செல் ஸ்டார்க் 10-0-39-0, பேட் கம்மின்ஸ் 13-2-57-2, ஸ்காட் பொலண்ட் 12-4-22-2, நாதன் லயன் 5-1-18-0, மிட்செல் மார்ஷ் 3-0-15-0

ரோகித்தை வீழ்த்திய கம்மின்ஸ்
* பும்ரா தான் விளையாடிய பாக்சிங் டே டெஸ்ட்களில் நேற்று வரை 19 விக்கெட் எடுத்துள்ளார்.
* கேப்டன் ரோtகித்துக்கு எதிராக 13 இன்னிங்ஸ்களில் 199 பந்துகளை வீசி, 127 ரன் விட்டுக் கொடுத்து 7 முறை விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ்.
* ஸ்காட் பந்து வீச்சை 5வது இன்னிங்சில் சந்தித்த கோஹ்லி 73 பந்துகளில் 27ரன் மட்டுமே எடுத்துள்ளார். 3முறை ஆட்டமிழந்துள்ளார்.

The post கை நழுவும் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா ரன் வேட்டை இந்தியா விட்டது கோட்டை; 310 ரன் பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : Australia ,India ,Melbourne ,Melbourne.… ,Dinakaran ,
× RELATED சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற...