மவுன்ட் மவுங்கனுய்: நியுசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மவுன்ட் மவுங்கனுய் நகரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து துவக்க வீரர்கள் டிம் ராபின்சன் 11, ரச்சின் ரவீந்திரா 8 ரன் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். அதன் பின் வந்தோரும் சிறப்பாக ஆடாததால் 65 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. இருப்பினும், டேரில் மிட்செல் 62 ரன், மைக்கேல் பிரேஸ்வெல் 59 ரன் குவித்தனர்.
இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு நியுசிலாந்து அணி 172 ரன் எடுத்தது. இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் பதும் நிஸங்கா 90, குஸால் மெண்டிஸ் 46 ரன் விளாசி சிறப்பான துவக்கத்தை தந்தனர். இருப்பினும் 14வது ஓவரில் அதே ரன்னில் 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டத்தின் போக்கு திசை மாறியது. 20 ஓவர் முடிவில் இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன் மட்டுமே எடுத்து, 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 3 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்தின் ஜேகப் டஃபி ஆட்ட நாயகன்.
The post இலங்கையுடன் முதல் டி20 நியூசிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.