புலவயோ: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் டெஸ்டில் ஆடி வருகிறது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே, 3 வீரர்கள் சதமடித்ததால் 586 ரன் குவித்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்திருந்தது.
3ம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்த ஆப்கன் வீரர்கள் ரஹ்மத் ஷா, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், ரஹ்மத் ஷா 231, ஹஸ்மதுல்லா 141 ரன்னுடன் களத்தில் இருந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 425. இந்த இருவரும் 3வது விக்கெட்டுக்கு 361 ரன் குவித்து புதிய சாதனை படைத்தனர்.
The post ஜிம்பாப்வேக்கு எதிராக 231 விளாசிய ஆப்கன் வீரர் appeared first on Dinakaran.