நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கன்னட நடிகர் கைது

பெங்களூரு: கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முத்துலட்சுமி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சாரித் பாலப்பா. இந்நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட டிவி சீரியல்களில் நடித்துவரும் 29 வயது நடிகை போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் சாரித் பாலப்பாவை எனக்கு 2017ம் ஆண்டிலிருந்து தெரியும். ஆனால், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 1 முதல் என்னை காதலிப்பதாகக் கூறி அவருடன் உடலுறவில் ஈடுபடும்படி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் மறுக்கவே, என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தார். கூட்டாளிகளுடன் ஒருமுறை என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னை துன்புறுத்தினார். பணம் தராவிட்டால் எனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டினார். என்று அந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், சீரியல் நடிகர் சாரித் பாலப்பா மீது வழக்குப்பதிவு செய்த ஆர்.ஆர்.நகர் போலீசார், சாரித் பாலப்பாவை கைது செய்தனர்.

The post நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கன்னட நடிகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: