×

மாருதி கார் புரட்சியை ஏற்படுத்திய ஜப்பான் சுஸுகி மோட்டார் ஒசாமு சுசுகி காலமானார்

டோக்கியோ: மினி கார் உருவாக்கிய ஜப்பான் நாட்டில் சுஸுகி மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் ஒசாமு சுசுகி காலமானார். அவரது வயது 94. அவர் 1958ல் மத்திய ஜப்பானிய நகரமான ஹமாமட்சுவை தளமாகக் கொண்ட சுசுகி மோட்டார் நிறுவனத்தில் சேர்ந்தார்.அந்நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ஷுன்சோ சுசுகியின் மகளை மணந்தார். 1978ல் சுசுகியின் தலைமை நிர்வாக அதிகாரியானார். அதன்பின் இந்தியாவில் சிறிய மாருதி கார் உற்பத்தியைத் தொடங்கி பிரபலமானார். 1979 ம் ஆண்டில், அவர் சுஸுகி மோட்டரின் நான்காவது நிறுவனத் தலைவராக ஆன ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் மலிவு விலையில் ஒரு மினிகாரை அறிமுகப்படுத்தினார்.

இது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சுஸுகி கார் விற்பனை பத்து மடங்கு அதிகரித்து வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியாக இருந்தது. 2015ம் ஆண்டு தனது 85 வயதில் சுஸுகி நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர், தனது மகன் தோஷிஹிரோ சுஸுகிக்கு அந்த பதவியை வழங்கினார். 2021ம் ஆண்டு வரை அவர் சுஸுகி நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றினார். அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாருதி கார் புரட்சியை ஏற்படுத்திய ஜப்பான் சுஸுகி மோட்டார் ஒசாமு சுசுகி காலமானார் appeared first on Dinakaran.

Tags : Osamu Suzuki ,Japan ,Suzuki Motor Co. ,Maruti ,Tokyo ,Suzuki Motor Co., Ltd. ,Hamamatsu ,Dinakaran ,
× RELATED ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது சைபர்...