இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி

நெல்லை: இந்திய அஞ்சல் துறை தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். போட்டிக்கான கடிதத்தை, ‘எழுத்தின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’ ‘The Joy of Writing: Importance of Letters in a Digital age’ என்னும் தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி ‘முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

உள்நாட்டு கடித பிரிவில் (Inland Letter Card) 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (Envelope) 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும். 1.1.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றவர் – நிறைவு பெறாததவர் என்பதற்கான வயது சான்று கடிதமும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிர மாகும். இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமாகும். இரண்டாம் பரிசு ரூ. 25 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் கடிதம் சென்று சேருமாறு கடிதங்களை அனுப்பிட வேண்டும்.

The post இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: