×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை; பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர். பல்கலைக் கழகத்தில் உள்ள 70 சிசிடிவி-க்களில் 56 மட்டுமே செயல்படுகின்றன.

குற்ற சத்திர பதிவேடு குற்றவாளியை அண்ணா பல்கலை.க்குள் எவ்வாறு அனுமதித்தார்கள்? ஞானசேகரன் மீது 20 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துமீறலை செல்போனில் படம்பிடித்ததாகவும் மாணவி புகார் அளித்துள்ளார். பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டவர் மன்மோகன் சிங்; 10 ஆண்டுகால ஆட்சியில் சிறப்பாக ஆட்சி செய்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anna University ,CBI ,Edappadi Palaniswami ,Chennai ,Opposition Leader ,
× RELATED பாலியல் வன்கொடுமை சம்பவம்: அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்