×

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயாமும், மன வேதனையும் அடைந்தேன். பொருளாதார நிபுணராக தனது பணியை தொடங்கிய டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், தலைமைப் பொருளாதார ஆலோசகர், பாரத ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்டக் குழுவின் துணைத் தலைவர், இந்தியப் பிரதமரின் ஆலோசகர் என மத்திய அரசில் பல்வேறு முக்கியமானப் பதவிகளை வகித்த பெருமைக்குரியவர்.

1991 ஆம் ஆண்டு இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்திய நாட்டின் நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், தன்னுடைய அறிவார்ந்த ஆற்றலாலும், நீண்ட அனுபவத்தாலும் பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது. இந்திய நாட்டு மக்களுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் இவருடைய இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இதன் மூலம், மிகப் பெரிய நாடாளுமன்றவாதியை, மனிதநேயம் மிக்கவரை, தேசிய வாதியை, சோர்வில்லாமல் சமுதாயத்திற்காக உழைத்தவனர இந்திய நாட்டு மக்கள் இழந்துவிட்டனர். இனி யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை இவருடைய இழப்பு ஏற்படுத்திவிட்டது. டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இவருடைய இழப்பை துணிவு.னும், மனோபலத்துடனும் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவான வேண்டுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Former ,Manmohan Singh ,Chief Minister ,O. PANNIERSELVAM ,Chennai ,Former Chief Minister ,O. Paneer Selvam ,Dr. ,Prime Minister of India ,
× RELATED டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்