- தமிழ்நாடு
- புதுச்சேரி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- மத்திய மேற்கு வங்காளகடல்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (26-12-2024) காலை 05.30 மணி அளவில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில் மேலும் வழுவிழந்தது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28-12-2024 முதல் 30-12-2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 31-12-2024 மற்றும் 01-01-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.