கரூர், டிச. 27: கரூர் மாவ ட்ட பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் அய்யன் திருவள்ளுவர் திருவூருவச் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கரூர் பரணி கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன், நான் ரசித்த வள்ளுவம் என்ற தலைப்பில் பேசியதாவது:
நம்முடைய லட்சியங்கள் உயர்வு மிக்கதாக இருக்க வேண்டும். அதனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். திருக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு வழிகாட்டி, லட்சியத்தை அடைய உடன் அழைத்துச் செல்வார். இந்த பயணத்தில் சோதனைகள் வரும் போது அவரது தன்னம்பிக்கை குறள்கள் நமக்கு உற்சாகம் ஊட்டும். காந்தியடிகள் பின்பற்றிய அகிம்சை முறைக்கு திருக்குறள் முன்னோடியாக இருந்தது. திருக்குறள் என்பது புத்தகம் அல்ல. வாழ்வியல் நெறிமுறையாகும். திருக்குறள் மட்டுமே 57ககும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது அதன் சிறப்பாகும்.
திருக்குறள் நமக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்த பொக்கிஷம். கன்னியாகுமரியில் முன்னாள் முதல்வர் கலைஞரால் 133 அடி உயர திருவூருவச் சிலை வானுரய அமைக்கப்பட்டது போற்றுதலுக்கு உரியது. அதை இன்று தமிழகம் முழுதும் வெள்ளிவிழாவாக கொண்டாடி வருகிறோம். என் வாழ்வில் திருக்குறளை ஆர்வத்துடன் கற்று அதன் பெருமையை மாணவர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்து வருகிறேன். திருக்குறள் என்பது தன்னம்பிக்கை. அந்த கையை பிடித்துச் சென்றால் வெற்றி என்ற இலக்கை எளிதாக அடைய முடியும் என்றார். இந்த விழாவில், ஸ்காட்லாந்து கெரியட் வாட் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து கலந்து கொண்டு பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்த நான் இன்று உலக நாடுகளில் பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பதற்கு உறுதுணையாக இருப்பது திருககுறளே ஆகும்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் சக்தி திருக்குறளையே சாரும். முக்காலத்தையம் உணர்த்துகின்ற ஒரே நூல் திருக்குறள். கல்வி மேலாண்மை போன்ற அனைத்து துறைகளுக்கும் மேற்கொள்கள் திருககுறளில் உள்ளது. அத்தகையை திருக்குறளை கற்போம், போற்றுவோம், அதன் வழி நடப்போம் என்றார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற்றார். நு£லக பெரும் புரவலர் ஈஸ்வரமூர்த்தி, வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக இனாம் கரூர் கிளை நூலகர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்
The post திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா; முக்காலத்தையம் உணர்த்துகின்ற ஒரே நூல் திருக்குறள் appeared first on Dinakaran.