வெள்ளியணை அருகே கஞ்சா விற்க முயன்றவர் மீது வழக்கு பதிவு

கருர்: கருர் மாவட்டம் வெள்ளியணை அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள ஜல்லிப்பட்டியை ஒட்டியுள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வெள்ளியணை போலீசார்களுக்கு தகவல் வந்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நபர் மீது வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து, அவரிடம் இருந்து 50 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெள்ளியணை அருகே கஞ்சா விற்க முயன்றவர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: