கரூர் டிச. 18: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டு திருமாநிலையூர் கிழக்கு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்தில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை பணிகளை துணை மேயர் மற்றும் ஆணையர் நேரில் ஆய்வு செய்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் நான்கு 36- வது வார்டு பகுதியைச் சார்ந்த மக்கள் நீண்ட நாட்களாக கான்கிரீட் சாலை அமைதி தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் திருமாநிலையூர் கிழக்கு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சரி செய்து அதன் மேற்புறத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 8 லட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.இப்பணிகளை துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் கே.எம்.சுதா, மாமன்ற உறுப்பினரும் கல்விக்குழு தலைவருமான வசுமதி பிரபு மண்டல தலைவர் எஸ் பி கனகராஜ், துணைப் பொறியாளர் மஞ்சுநாத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
The post கரூர் மாநகராட்சி 36-வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.8 லட்சத்தில் சாலை appeared first on Dinakaran.