×

செங்கோட்டையில் பாலியல் தொழில் செய்த இருவர் கைது

செங்கோட்டை,டிச.27: செங்கோட்டையில் பாலியல் தொழில் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டையில் பிரதான பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், பாலியல் தொழில் நடப்பது ஊர்ஜிதமானது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட அச்சன்புதூரை சேர்ந்த முத்துராமலிங்கம், சிவந்திபுரத்தை சேர்ந்த காவேரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செங்கோட்டையில் பாலியல் தொழில் செய்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sengottai ,Sub-Inspector ,Selvi ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை, மேலகரத்தில் எம்ஜிஆர் நினைவுதினம்