நான் ஏதாவது பேசினால் பிரதமரை ரிப்ளக்ட் பண்ணும் என்பதால் அமைதியாக இருக்கிறேன். அரசியலில் மக்கள் பிரச்னையை பேச முடியவில்லை. நாளை முதல் ஆர்ப்பாட்டம் அப்படி கிடையாது. இனி ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் ஆர்ப்பாட்டம் நடக்கும். நாளை (இன்று) காலை 10 மணிக்கு எனக்கு நானே சாட்டையடி தரும் நிகழ்வு நடக்கப்போகிறது. என் வீட்டுக்கு வெளியே இதை நடத்த போகிறேன். சாட்டையால் என்னை நான் 6 முறை அடித்துக் கொள்ளப் போகிறேன். நாளை முதல் நான் என் காலில் செருப்பு போட மாட்டேன்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து நான் செருப்பு போட மாட்டேன். 48 நாட்களுக்கு நான் அறுபடை முருகனுக்காக விரதம் இருக்க போகிறேன். பிப்ரவரி மாதம் அறுபடை வீட்டுக்கு போகப் போகிறேன். இனி நான் முருகனிடம் முறையிட போகிறேன். குற்றவாளிக்கு மாவு கட்டு போட்டு போட்டோ எடுத்து கொடுத்து விட்டால் மக்களின் கோபம் தணிந்து விடுமா?. 10 நாளில் சார்ஜ் சீட் போட வேண்டும். தண்டனை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டி கொடுக்கும்போதே செருப்பை கையில் தூக்கி காட்டிய அண்ணாமலை பேட்டி முடிந்த பின் செருப்பு இல்லாமல் நடந்து சென்றார்.
The post ‘நாளை முதல் காலில் செருப்பு போட மாட்டேன்’ வீட்டின் முன் நின்று 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன்: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.