×

பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்

ராஜபாளையம்: ராஜபாளையம் காவல் நிலைய பெண் காவலரிடம் அத்துமீறிய சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் மோகன்ராஜ் (54). இவர் மேற்கண்ட காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி கண்ணன், மோகன்ராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து துறைரீதியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.

The post பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : SI ,Rajapalayam ,Rajapalayam police station ,Mohanraj ,Rajapalayam South police station ,Virudhunagar district ,
× RELATED பெண் போலீசிடம் போதையில் சீண்டல் சிறப்பு எஸ்ஐ அதிரடி மாற்றம்