- வல்லபாய்
- ஐயப்பன்
- கோவில்
- சபரிமலை
- தெற்கு
- சாமி
- ராமநாதபுரம்
- மண்டலா பூஜா
- வல்லபாய் அய்யப்பன் கோயில்
- தென்னகம்
- வலப்பாய் அய்யப்பன் கோயில்
- சபரிமலை
- சாமி தரிசனம்
ராமநாதபுரம்: தென்னகத்தின் சபரிமலை என அழைக்கப்படும் ராமநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐயப்பன் கோவிலில் 26ஆம் ஆண்டு மண்டல பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. சபரிமலையில் பிரசித்தி பெற்ற நிகழ்வாக கருதப்படும் பேட்டை துள்ளல் நிகழ்வானது. சபரிமலைக்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் இருக்க கூடிய வல்லபை ஐயப்பன் கோயிலில் மட்டுமே நடைபெறும்.
ராமநாதபுரத்தை அடுத்த ரகுநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள வல்லபை ஐயப்பன் கோயிலில் 26 ஆம் ஆண்டு மண்டல பூஜையை ஒட்டி பேட்டை துள்ளல் ஆறாட்டு விழா நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வண்ண பொடிகளை முகம் மற்றும் உடலில் பூசிக்கொண்டு பேட்டை துள்ளல் நிகழ்வில் பங்கேற்றனர். நாட்டிய குதிரைகளின் நடனத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தென்னகத்தின் சபரிமலை என அழைக்கப்படும் வல்லபை ஐயப்பன் கோயில்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் appeared first on Dinakaran.