விடுமுறை தினத்தையொட்டி களைகட்டிய சுற்றுலா தலங்கள்: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மாமல்லபுரம்: கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் காலை முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். வெண்ணெய் உருண்டைப்பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோவில் உள்ளிட்டவற்றையும் கண்டு ரசித்தனர். தொடர்மழையால் வேடந்தாங்கல் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதால் சரணாலயத்தில் சீசன் களைகட்டியது.

வெள்ளை அரிவாள்மூக்கன், நத்தைகுத்தி, நாரை சாம்பல் நாரை, கூழி கடா, பாம்பு தாரா உள்ளிட்ட பறவைகளை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர். கன்னியாகுமரியில் சன் ரைஸ் பாயிண்ட் , முக்கடல் சங்கமம், படித்துறை, பகவதி அம்மன் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடலில் குளித்தும், கடற்கரையோர கடைகளில் பானி, சங்கு, மாலை உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி சென்றனர். திருச்செந்தூர் கடற்கரையில் குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள் கடற்கரையில் நீராடி மகிழ்ந்தனர். கடற்கரை மணலில் சிறுவர்கள் கபடி விளையாடியும், சிலம்பம் சுற்றியும் உற்சாகம் அடைந்தனர். ராமேஸ்வரத்தில் அதிகாலை முதலே வழக்கத்தை விட மக்கள் அதிக அளவில் திரண்டதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post விடுமுறை தினத்தையொட்டி களைகட்டிய சுற்றுலா தலங்கள்: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: