மதுராந்தகம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: நோயாளி உள்பட 6 பேர் காயம்


மதுராந்தகம்: திருப்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்புலன்ஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், நோயாளி உள்பட 6 பேர் காயமடைந்தனர். திருப்பூரில் இருந்து ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒரு நோயாளிகளை ஏற்றி கொண்டு சென்னைக்கு இன்று அதிகாலை புறப்பட்டது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோயில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் நோயாளி மற்றும் அவருடன் வந்த 5 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கவிழ்ந்த ஆம்புலன்சை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மதுராந்தகம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: நோயாளி உள்பட 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: