புதிய ரயில் பாலத்தில் நேற்று மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா ட்ராலியில் சென்று பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கர்டர்களின் இணைப்புகளை பார்வையிட்டு செங்குத்து தூக்கு பாலத்தின் அருகே உள்ள ஆபரேட்டர் அறையில் இறங்கி ஆய்வு செய்தார். செங்குத்து பாலத்தின் தூண் உள்ளே உள்ள லிப்ட் மூலம் மேலே சென்று தூக்கு பாலத்தை உயர்த்தி, இறக்கி சோதனை செய்தார். சிஆர்எஸ் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். புதிய ரயில் பாலத்தின் உறுதித்திறனை ஆராய்வதற்கு அமைக்கப்பட்டிருக்கும் 5 பேர் கொண்ட புதிய கமிட்டியிடம் புதிய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பாலத்தில் புதிய ரயில் இயக்குவது குறித்து தகவல் வெளியாகும்.
The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் குறைபாடு சரி செய்யப்பட்டதா?: மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.