சென்னை: சமீபத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழ்நாட்டை சேர்ந்தவரும் இந்திய கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு குறித்து அலசி வந்தனர். இந்நிலையில் அஸ்வின் அளித்த பேட்டி: விளையாட்டின்போது நான் எப்போதும் சீரியசாக இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்திய அணியின் வெற்றித் தருணங்களை விராட் கோலி போல் நான் குதுாகலித்து கொண்டாடுவதில்லை என அவர்கள் கூறுகின்றனர். அது உண்மை அல்ல. கிரிக்கெட் என்பது எல்லோரும் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டு. இதில் குறிப்பிட்ட ஒரு சிலரை கடவுளாக கருதுவதோ, மற்றவர்களை புறம் தள்ளுவதோ தவறு. என்னை பொறுத்தவரை, என் கிரிக்கெட் உலகிலும், வாழ்க்கையிலும் அதி முக்கியமான விளையாட்டு வீரர் நான்தான். வெளிப்புறம் உள்ள கோஹ்லியோ, ரோகித்தோ அல்லது வேறு யாரோ அல்ல. அதேபோன்று ஒவ்வொருவரின் பயணமும் உன்னதமானது; முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
The post எனது கிரிக்கெட் உலகில் நானே என்றும் ராஜா: மனம் திறக்கிறார் அஸ்வின் appeared first on Dinakaran.