வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய 5 டன் உலோக மிதவை

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கடற்கரையில் 5 டன் எடை உலோக மிதவை நேற்று கரை ஒதுங்கியது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கடற்கரையில் உலோகத்தில் ஆன மிதவை ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கியது. இந்த மிதவை, துறைமுகங்களில் கப்பலுக்கு ஆழமான பகுதியை உறுதிப்படுத்துவதற்காக நிறுத்தப்படுவதாகும். தகவலறிந்த வேட்டைக்காரன் இருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மிதவையை பார்வையிட்டனர். இந்த மிதவை சுமார் 12 அடி உயரம், 10 அடி அகலம், 5 டன் எடை கொண்டதும், இந்த மிதவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பள்ளி கடற்கரையில் ஒதுங்கியதும், அதிக எடை இருந்ததால் அதனை மீட்க முடியாத நிலையில் அப்படியே விட்டு விட்டு சென்றதும், நான்கு ஆண்டு கழித்து புதுப்பள்ளியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள கோவில்பத்து கடற்கரை பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரை ஒதுங்கி உள்ளது எனவும் தெரிய வந்தது. கரை ஒதுங்கிய மிதவையை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

The post வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய 5 டன் உலோக மிதவை appeared first on Dinakaran.

Related Stories: