×

அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை அம்பேத்கரை மிகமிக இழிவாக பேசியதோடு, காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். அம்பேத்கரின் பங்களிப்பு காரணமாகத் தான் இன்றைக்கும் பட்டியலின, சிறுபான்மையின, பின்தங்கிய மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு கவசம் அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் தான். அந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம் தான், ஜனநாயகம், சமூகநீதி, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகு, கருப்பொருளாக டாக்டர் அம்பேத்கர் இருக்கிறார் என்றால் அவர் அனைத்து இந்திய மக்களின் குரலாக இருந்து அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியது தான் காரணமாகும். எனவே, அம்பேத்கரை பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் வந்தால் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும். அதன்மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை மோடி, அமித்ஷா உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் உணர வேண்டும்.

The post அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி செல்வபெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Selva Perundakai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Union Home Minister ,Parliament ,Ambedkar ,Congress party ,Dinakaran ,
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு செல்வபெருந்தகை கண்டனம்