- கம்யூனிஸ்ட் கட்சி
- இந்தியா
- Mutharasan
- சென்னை
- அரசுத்தலைவர்
- பொதுவுடைமைக்கட்சி
- of
- நகர் பாலன்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- கம்யூனிஸ்ட்
- இந்தியக் கட்சி
- முத்தராசன் தகவல்
சென்னை: சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: 1925ம் ஆண்டு டிச.26 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. அதே நாளில் சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவும் பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவை இன்று பாலன் இல்லத்தில் நல்லகண்ணு கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், தோழர் நல்லகண்ணுவையும் பிரிக்க முடியாது. கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் அன்று முதல் இன்று வரை காட்டிக் கொடுப்பது என்பது அவர்கள் வழக்கமல்ல. எவ்வளவு சித்திரவதைகள் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்களே தவிர ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.
இன்று தொடங்கி அடுத்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வரை ஓராண்டு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும், நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவும் இணைந்தே கொண்டாடப்படும். ஆர்எஸ்எஸ் என்னும் மோசமான இயக்கத்தின் அரசியல் பிரிவு தான் பாஜக. இந்த நாட்டை பாசிச பாதையில் கொண்டு செல்லும் அனைத்து செயல்களும் செய்து கொண்டிருக்கிறார். அதிபர் முறையை கொண்டு வந்து, அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் தமிழ்நாடு கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு வஞ்சனை செய்கிறார்கள். பிளவு பட்டு தனித்தனியாக செயல்படுவது நாட்டிற்கோ குடிமக்களுக்கோ நல்லதல்ல. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post இன்று தொடங்கி அடுத்த ஆண்டு டிச.25ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்: முத்தரசன் தகவல் appeared first on Dinakaran.